Editorial / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா, அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இறக்காமம், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் அறுவடை செய்யப்படவிருந்த சுமார் 3,000க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேளான்மைகள் நிலத்தில் விழுந்துள்ளதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அறுவடை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
19 minute ago
40 minute ago
6 hours ago
10 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
6 hours ago
10 Mar 2026