Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் வீதிகளில் குப்பைகளை கொட்டி பொது மக்குளுக்கு இடையூறு விளைவித்து மற்றும் டெங்கு நோய் பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளரை 01 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் வெள்ளிக்கிழமை (04) விடுதலை செய்துள்ளார்.
சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள 07 பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளைகளுக்கு அருகாமையில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. இதனை துப்பரவு செய்யுமாறும், குறித்த நபருக்கு பொலிஸார், பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்தியதிகாரி ஆகியோர் பல முறை கோரிக்கை விடுத்தும், இதனை உதாசினம் செய்து தொடர்ந்து இப் பிரதேசங்களில் குப்பைகளை கொட்டி வந்துள்ளார்.
இதையடுத்து, குறித்த முகாமையாளருக்கெதிராக பொலிஸார் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இவ் வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், சம்மாந்துறை பிரதேசத்தில் வடிகானில் மிகவும் சூசியமான முறையில் வீட்டுக் கழிவுகளை கொட்டிய 02 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 01 நபருக்கு 03 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றைய நபர் நீதிமன்றுக்கு ஆஜராகாமையினால் அவருக்கெதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .