2025 மே 01, வியாழக்கிழமை

பல்கலைக்கழக அதிகாரிகள் கண்டனம்

Editorial   / 2017 டிசெம்பர் 29 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 03 நாட்களாக, பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிருவாக கட்டடத்துக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை தமது கடமைகளைச் செய்யவிடாது இடையூறுகளை விளைவித்து வருவதை கண்டித்து, பல்கலைக்கழக அதிகாரிகள் நிருவாக கட்டடத்தை விட்டு இன்று (29) வேளியேறி தமது கண்டனத்தை தெரிவித்துள்ளதாக, உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் பொறியியல் பீட மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சுமார் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையையடுத்து பொறியியல் பீட மாணவர்கள் மூன்று பேருக்கு இரண்டு வருட  வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப பீட சிரேஷ்ட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை மிக மோசமான முறையில் பகடிவதைக்கு உட்படுத்தியதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து இரண்டு பேருக்கு 02 வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்தும், வகுப்புத் தடைய நீக்குமாறு கோரியும் இரண்டு பீடங்களைச் சேர்ந்த  மாணவர்களும், கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் 03 நாட்களாக தொடர்ச்சியாக நிருவாக கட்டடத்திற்கு முன்னால் மாணவர்கள் சத்தியக்கிர போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அங்கு கடமை புரியமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பல அசௌகரீகங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்து, நிருவாகிகள் வெளிநடப்பு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இம்மாணவர்களுக்கெதிராக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .