2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பள்ளிவாசல் நிர்வாகத்தால் மருந்து உதவிகள் வழங்கல்

Princiya Dixci   / 2020 நவம்பர் 11 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்       

நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினரால், விசர்நாய் கடிக்குப் பயன்படுத்தக் கூடிய மருந்துகளைக் கொள்வனவு செய்து அதிகாரிகளிடம் கையளிக்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில், பிரதேச செயலகத்தில் இன்று (11)நடைபெற்றது.

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, இம்முறை தேசிய மீலாத் தின நிகழ்வுகள், "அகிலத்துக்கு ஓர் அருட்கொடை" எனும் தொனிப்பொருளில், ஜீவகாருண்யம், நலிவுற்ற சமூகத்துக்கு உதவி செய்தல், மரங்களை நடுதல் போன்ற பல்வேறுபட்ட சமூகநல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்த வேலைத்திட்டத்துக்கு அமைய, ஒரு தொகை விசர் நாய் கடிக்குரிய மருந்துகளை,  பிரதேசத்தின் கால்நடை வைத்திய அலுவலகத்துக்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டது. 

நிகழ்வில் ஹைரியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் எம்.சி.ஏ. றஸாக், பிரதேச செயலாளரிடம்  மருந்துகளைஒப்படைத்தார். பிரதேச செயலாளர், கால்நடை வைத்திய அதிகாரி டொக்டர்.எஸ்.எம்.நபீரிடம் வழங்கினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X