2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பஸ்ஸில் போதைப்பொருள் கொண்டு சென்றவர் கைது

Editorial   / 2018 ஜனவரி 19 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கொழும்பிலிருந்து அம்பாறை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் போதைப் பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று (19) அதிகாலை 05.30 மணியளவில் அம்பாறை விசேட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .