Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர்
கொரோனாவில் இருந்து பாதுகாப்புப் பெற விலங்குகள் மற்றும் பறவைகளுடனான தொடர்புகளை பொதுமக்கள் குறைத்துக்கொள்ள வேண்டுமென நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய காலகட்டத்தில் எந்தத் துறையினராக இருப்பினும் சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் நேற்று (14) நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தடுப்பூசிகளை வயது வித்தியாசமின்றி நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் அநாவசியமான வீட்டில் இருந்து வெளியேற வேண்டாம்.
“ஆயுர்வேத சுகாதாரத் துறையானது விலங்குகள் மற்றும் பறவைகளின் தொடர்புகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் என ஆலோசனை வழங்குகின்றது.
“தோடம்பழம், தேசிக்காய் போன்ற பானங்கள் மற்றும் அரிசிக்கஞ்சிகளை அடிக்கடி நாம் அருந்த வேண்டும். அதிகமான இயற்கை உணவுகளை உண்ண வேண்டும். 8 தொடக்கம் 10 மணிவரை ஓய்வெடுக்கவும்.
“மாமிச உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. சுமார் 1 மணித்தியாலம் சூரிய ஒளி கிடைக்க கூடிய வகையில் இருத்தல் வேண்டும். வீடுகள், அலுவலகங்கள் என நாம் வசிக்கின்ற இடங்களை நன்கு காற்றோட்டம் உள்ள இடமாக மாற்றிக் கொள்ளல் வேண்டும்.
“இவற்றைச் செய்வதன் ஊடாக டெல்டா மாத்திரமல்ல, எந்த வைரஸ் திரிபுகள் எதிர்காலத்தில் உருவாகினாலும் அதிலிருந்து நாம் எம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்றார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago