2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பாலத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 செப்டெம்பர் 16 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள உடங்கா ஆற்றுக்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்துக்கான பாலம், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டின் 40 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அழைப்பின் பேரில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இப்பாலத்துக்கான அடிக்கல்வை, நேற்று வெள்ளிக்கிழமை (15) நாட்டி வைத்தார்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் யு.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஐ.எம்.இப்றாகீம், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.முஸ்தபா, கமக்கார அமைப்புகளின் பிரநிதிகள், விவசாயிகள் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அயராத முயற்சியின் பலனாக இவ்பிரதேச விவசாயிகளின் நீண்டகால தேவையாக இருந்த இப்பாலத்தின் ஊடாக 5 விவசாய கண்டங்களிலுள்ள சுமார் 2ஆயிரம் ஏக்கர்களில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .