Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, நூருள் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளுக்கு புதிய அம்பியூலன்ஸ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இவற்றைக் கையளிக்கும் நிகழ்வு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இன்று (28) இடம்பெற்றது.
இதன்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரி.எஸ்.ஆர்.ரி..ஆர்.ரஜாப் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.பி.மசூத் ஆகியோரிடம் அம்பியூலன்ஸ்களின் திறப்பு மற்றும் ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
கல்முனைப் பிராந்தியத்திலுள்ள பல வைத்தியசாலைகளுக்கும் அம்பியூலன்ஸ் தேவையாக இருக்கின்ற போதிலும், சுமார் 04 வருடங்களுக்குப் பின்னர் சுகாதார அமைச்சால் எமது பிராந்தியத்துக்கு கிடைக்கப்பெற்ற இந்த இரண்டு புதிய அம்பியூலன்ஸ்களும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் அவசர, அவசியத் தேவை மற்றும் சேவை என்பவற்றை முன்னுரிமையாகக் கொண்டே இவ்விரு வைத்தியசாலைகளும் தெரிவு செய்யப்பட்டு, வழங்கி வைக்கப்பட்டுள்ளன என்று பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் மேலும் இரண்டு புதிய அம்பியூலன்ஸ்களை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் வாகனப் பிரிவு உறுதியளித்திருப்பதாகவும் அவை கிடைக்கப் பெற்றதும் இன்னும் இரண்டு வைத்தியசாலைகளுக்கு அவற்றை வழங்கி வைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.எம்.வாஜித், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர் உட்பட வைத்திய அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
4 minute ago
13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
2 hours ago