2025 மே 15, வியாழக்கிழமை

புதிய உறுப்பினராக அஸாம் சத்தியப்பிரமாணம்

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மருதமுனையை சேர்ந்த சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம், கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் நேற்று (21) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கல்முனை மாநகர மேயர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், மாநகர சபையின் முன்னாள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் ஏ.ஜி.எம்.நதீர், முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எம்.ஐ.எம்.மஸீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பான உறுப்பினராக பதவி வகித்து வந்த தாஜுதீன் முபாரிஸ் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திக்கே சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம்   அக்கட்சியால் புதிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .