Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு 2017-2018ஆம் கல்வி ஆண்டுக்காக புதிய பயிற்சி ஆசிரியர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான பதிவுகள், நாளை மறுதினம் (06) இடம்பெறவுள்ளதாக, கலாசாலை அதிபர் ஏ.சி.எம். சுபையிர், நேற்றுத் தெரிவித்தார்.
இம்முறை இக்கலாசாலையில் பயிற்சிக்கென 150 பயிற்சி ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஆரம்பப் பிரிவுப் பயிற்சி நெறிக்கென 99 ஆசிரியர்களும் உடற்கல்வித்துறைக்கு 28 ஆசிரியர்களும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடநெறிக்கு 17 ஆசிரியர்களும், இஸ்லாம் பாட பயிற்சி நெறிக்கு 06 ஆசிரியர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகப் பரீட்சை, கல்வியமைச்சில் அண்மையில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கலாசாலையில் தற்போது இரண்டாம் வருட பயிற்சி ஆசிரியர்கள் 320க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று வருவதால் இடவசதி போதியளவு இல்லாத நிலையிலும், புதிய பயிற்சி ஆசிரியர்களின் நன்மை கருதி மட்டுப்படுத்தப்பட்ட தொகையினர் புதிதாக பயிற்சிக்கென இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago