Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, வர்த்தக நிலையங்களிலும் உணவகங்களிலும் விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக, பாவனையாளர் அலுவலகள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம்.சப்றாஸ் தெரிவித்தார்.
விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விடக் கூடுதல் விலைக்குப் பொருள்களை விற்பனை செய்தல், நுகர்வுக்குப் பொருத்தமில்லாத, காலவதியான, தரமற்ற பொருள்களை விற்பனை செய்தல், நுகர்வோரை ஏமாற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கெதிராக, இதன்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அவர் கூறினார்.
அம்பாறை மாவட்டத்தின் கிராமப் புறங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள், தேநீர்க் கடைகள், உணவகங்கள் போன்றவற்றில், நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருள்களும், உணவுப் பண்டங்களும் விற்பனை செய்யப்படுவதாக, பொதுமக்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரதேசங்களிலும், பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் எனவும், அவர் மேலும் கூறினார்.
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago