Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் கொவிட்-19 மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியான பைஸசர் தடுப்பூசியை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி டொக்டர் ஜ.எல்.எம். றிபாஸ், இன்று (27) கேட்டுக்கொண்டார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் வீதம் குறைவாக காணப்படுவதால் பைஸசர் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
முதலாவது, இரண்டாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில் முழுமையாக பாதுகாக்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளதால் அரச உத்தியோகத்தர்கள், வெளி இடங்களில் இருந்து வருபவர்கள், வியாபார நிலையங்களில் உள்ளவர்கள் மற்றும் பொது இடங்களில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் தவறாமல் தப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தடுப்பூசி அட்டை பரிசோதனை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது கிரமமான முறையில் இராணுவத்தினரால் கிராம சேவகர் பிரிவுகள் தோறும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும், இதுவரை பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக தங்களுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago