2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பெண்கள் மகாநாடு வெற்றிகரமாக நிறைவு

Freelancer   / 2022 பெப்ரவரி 16 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட மகளிர் சம்மேளன ஏற்பாட்டில் "ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெண்கள் முன்னணி" அம்பாறை மாவட்ட மாநாடு, அம்பாறை மாநகர சபை கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை   சிறப்பாக நடைபெற்றது.


அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சிங்கள தமிழ் , முஸ்லிம் மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
மார்ச் மாதம் கொண்டாப்படவுள்ள சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் முன்னேற்பாடாக இது அமையப் பெற்றுள்ளதுடன் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் இந்நிகழ்வின் போது முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டன.

இந்நிகழ்வில்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வனவிலங்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான விமலவீர திஸாநாயக , திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் , நகரசபை உறுப்பினர்கள் , பிரதேச சபை உறுப்பினர்கள் ,  கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அரசியல் அதிகார சபையின் செயற்குழு உறுப்பினர் திருமதி சுதர்மா விஜேரத்ன மற்றும் விசேட அதிதிகள் பலர்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X