Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் 2020/2021 பெரும்போக நெற் செய்கைக்கான ஆரம்பப் பணிகளில் விவசாயிகள் தற்பொழுது ஈடுபட்டு வருவதோடு, மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களிலும் இம்முறை பெரும்போகத்தில் நெற் செய்கை பண்ணப்படவுள்ளது.
நெற்காணிகளை உழுதுபன்படுத்தும் பணிகள் பரவலாக இடம்பெற்று வருகின்றன. இம்முறை அம்பாறை மாவட்டத்தில் சுமார் 01 இலட்சத்தி 50 ஆயிரம் ஏக்கர் காணிகளில் நெற்செய்கை பண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்கா சமுத்திரத்திலிருந்து பெரும்போக நெற்காணிகளுக்கான நீர் வழங்கப்படவுள்ளது. பாசன நீரை நம்பாது மழையை மாத்திரம் நம்பி நெற்செய்கையை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
உப உணவுப் பயிர்ச்செய்கையாளர்கள் ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர். இம்முறை மாவட்டத்தில் சோளம், நிலக்கடலை, கௌபி, பாசிப்பயறு என்பன பயிரிடப்படவுள்ளது.
பெரும்போக நெற்செய்கைக்கான ஆரம்பக் கூட்டம், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (29) அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்கா தலைமையில் நடைபெறவுள்ளதாக, விவசாயத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பிராந்திய விவசாயிகளை அறிவுறுத்தும் கூட்டம் பிரதேச செயலக ரீதியாக நடைபெறவுள்ளதாகவும், தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago