Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2020 மார்ச் 15 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இரண்டாவது பேராளர் மாநாடு, நாட்டில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள இயல்பற்ற சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக,ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார, போஷாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி அறிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கின்ற நடவடிக்கைகளில் ஒன்றாக பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கக் கூடிய ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டுமென, அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறான ஒன்றுகூடல்களைத் தவிர்க்க வேண்டுமென, சுயாதீன தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இரண்டாவது பேராளர் மாநாடு, வருடத்தின் இறுதித் தலைமைத்துவ சபை, உயர்பீடம் ஆகியவற்றின் கட்டாய கூட்டம் ஆகிய மறுஅறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago