Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 ஜனவரி 08 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்குப் பல்கலைக் கழக தொழில்நுட்ப, பொறியியல் பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடை, இடைநிறுத்தம் ஆகியவற்றை நீக்குமாறு, பல்கலைக் கழகத்தின் நிர்வாக் கட்டடத் தொகுதிக்கு முன்பாக இன்றும் (08) போரட்டம் தொடர்கின்றது.
கடந்த ஒரு வாரகாலமாக மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக் கழகத்தின் நிர்வாகக் கட்டடத்தினுள் புகுந்து தொடர் போராட்டங்களை மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்ட சட்ட நடவடிக்கையின் பொருட்டு, 53 மாணவர்களுக்கு நீதிமன்றம் தனித்தனியாக அழைப்பானை விடுத்திருந்தது.
நீதிமன்றத்தின் அழைப்பாணையின் பொருட்டு, கடந்த வெள்ளிக்கிழமை(05) நீதிமன்றத்தில் ஆஜரான போது மேற்படி சம்பவத்தை கேட்டறிந்த அக்கரைகப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல், கடும் எச்சரிக்கை விடுடுத்து, மாணவர் ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் சரீரப் பிணையும், நான்கு குழுவாக ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுமாறும் கட்டளை பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து, பல்கலைக்கழத்தின் நிர்வாகத்துக்குத் தடையில்லாதவாறு அக்கட்டத்தொகுதிக்கு முன்பாக கூடாரம் அமைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தெரிவித்தனர்.
எமது சக மாணவர்களுக்கான தடையை நீக்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும், அச்சுறுத்தலுக்கும் அடிமைத்தனத்துக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளாக்கப்படும் நிலைமை மாற வேண்டும் எனவும் கூறினர்.
தனிப்பட்ட பழிவாங்குதலால் கொடுக்கப்பட்ட வகுப்புத்தடை, இடை நீக்கம், அடக்குமுறைகளை இல்லதொழித்து மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago