2025 மே 15, வியாழக்கிழமை

போதைப் பொருள்களுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 செப்டெம்பர் 18 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

போதைப் பொருள்களுடன் கைதான இருவரை, 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.

நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர் நடமாடுவதாக சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, பொலிஸார் மேற்படி பிரதேசத்தில் புதன்கிழமை (16) இரவு விசேட சோதனைகளை மேற்கொண்டதுடன், ஐஸ், கஞ்சா போதைப் பொருளுடன் நால்வரை கைதுசெய்துள்ளனர்.

45,30 ,28 ,17 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நால்வரும்  நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்டபோது, அவர்களை 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .