2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பொத்துவில் மீனவர்களுக்கு பிணை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எம்.ஏ.தாஜகான்

அனுமதி பெறாமல் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 17 மீனவர்களையும் தலா 50,000 ரூபாய் படி சரீரப் பிணைகளில் செல்வதற்கு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸாக் அனுமதியளித்துள்ளார்.

அத்துடன், இவர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

அனுமதி பெறாமல்  கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 17 மீனவர்;களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து  இன்று புதன்கிழமை காலை கைதுசெய்துள்ளடன், அவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இவ்வாறிருக்க, இந்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து அங்கு ஏனைய மீனவர்களினால் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X