2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பொத்துவிலில் குடிநீர் வியோகத்திட்டம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 16 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகத்திட்டத்துக்காக நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் 06 கோடியே 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் குடிநீர்; மாசடைந்தது. இதனைத் தொடர்ந்து நாவலாற்றுப் பிரதேசத்தில்; 08 கிணறுகள் அமைக்கப்பட்டு அதனூடாக நீர் சுத்திகரிக்கப்பட்டு பொத்துவில், செங்காமம், இன்ஸ்பெக்டெர் ஏற்றம், உல்ல ஆகிய பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தற்போது இக்கிணறுகள் சேதமடைந்துள்ளதால் மக்கள் குடிநீரைப் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில், ஹெடஓயா நீர்;த்தேக்கத் திட்டத்திலிருந்து குழாய் மூலம் குடிநீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் ஒருவாரத்துக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஏ.எம்.தாஜுதின் இன்று  திங்கட்கிழமை தெரிவித்தார். இதன் மூலம் பொத்துவில், உல்ல, பாணாமை, லகுகல, செங்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நன்மையடையவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .