2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

பொத்துவிலில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு,எம்.எஸ்.எம்.ஹனிபா

பொத்துவில் கடற்கரைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள 17 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு கோரி அங்கு ஏனைய மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் 17 மீனவர்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து  இன்று புதன்கிழமை காலை கைதுசெய்துள்ளடன், அவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மீனவர்கள் மீன்பிடித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளாமல், கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டுவந்துள்ளனர். இது தொடர்பில்  இவர்கள் பலமுறை எச்சரிக்கப்பட்டதாகவும் கடற்றொழில் திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X