Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 நவம்பர் 08 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டபோது, திட்டமிட்டு தமிழ்த் தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்களை உடனடியாக வழங்குவதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தம்பிலுவில் தேசிய பாடசாலையின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு திங்கட்கிழமை (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கடந்த காலத்தில்; பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்திசெய்து, எந்தவிதக் கொடுப்பனவும் பெற்றுக்கொள்ளாது இவர்கள் அர்ப்பணிப்புடன் கடமையாற்றினர்.
தொண்டர் ஆசிரியர்களின் தன்னலம் கருதாத சேவைக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் மதிப்பளித்து, அவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கையில் சாதகமான முடிவை எடுக்க வேண்டும்' என்றார்.
7 minute ago
19 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
19 minute ago