Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பீடத்தின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வகுப்புப் பகிஷ்கரிப்பு மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினர் ஒலுவில் வளாகத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'இப்பொறியியல் பீடத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளில் முதற்கட்டமாக விரிவுரையாளர்கள் பற்றாக்குறை மற்றும் வகுப்பறைக் கட்டடம் போன்றவற்றுக்கு தற்காலிகத் தீர்வு காணப்பட்டுள்ளது. ஏனைய பிரச்சினைகளுக்கும் விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்.
மாணவர் தரப்பினரின் பிரச்சினைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இனங்கண்டுள்ளதுடன், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு திட்டமொன்றை வகுத்துள்ளோம்.
இப்பொறியியல் பீடத்தை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து இலங்கையில் முன்மாதிரியான பீடமாக கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றார்.
இங்கு மாணவர்கள் தெரிவித்தபோது, 'வகுப்பு பகிஷ்கரிப்பைக் கைவிட்டு உடனடியாக வகுப்புகளுக்கு செல்லவுள்ளோம். எங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கான உறுதிமொழியை விரைவில் வழங்கவேண்டும்' என்றனர்.
16 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
1 hours ago
1 hours ago