2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மதக்குழுக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும்

Princiya Dixci   / 2016 ஜனவரி 17 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 
கடந்த காலங்களில் ஏற்பட்ட இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வன்முறையான வழிகளை தெரிவுசெய்ததால் ஏற்பட்ட விளைவுகளில் இருந்து எம்மால் மீள முடியாது போயுள்ளதென அம்பாறை கல்மடுவ ரஜமஹா விகாரை விகாரதிபதி ஹேகொட விமலஞான தேரர் தெரிவித்தார்.
 
அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபையின் தவிசாளர் ஐ.எல். ஹாஸிம் தலைமையில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் அனுசரனையுடன், மதக்குழுக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை கல்மடுவ ரஜமஹா விகாரையில் சனிக்கிழமை (16) மாலை நடைபெற்ற கருத்தரங்கிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
எதிர்காலத்தில் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கக் கூடிய பாதுகாப்பான சூழல் எம்மத்தியில் உருவாக்கப்பட வேண்டும்.
 
இதற்கு பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயப் பாடசாலை மாணவர்களிடையே மத சகவாழ்வைப் பற்றிய கலந்துரையாடல்கள் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். இது எம்மிடையே புதிய தொடர்பாடல் இணைப்புக்களை உருவாக்கும்.
 
நம் தேசத்திலுள்ள பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு சகோதரனது தேவைகளையும் உரிமைகளையும் அடுத்த சகோதரன் புரிந்துகொண்டு மதித்து நடக்க தயாரான சூழலை எதிர்கால சந்ததி உருவாக்க வேண்டும்.

பிரச்சினைகளை, பேச்சுவார்த்தை மூலம் பேசித்தீர்ப்பதற்கான நட்புறவான சூழலை உருவாக்க பலமான அடித்தளத்தை உருவாக்கும்.
 
நம் தேசத்தில் ஜீவகாருணியத்தைப் போதிக்கும் பௌத்த தர்மம், அன்பை சிவனாக வணங்கும் இந்து மதம், சகோதரத்துவத்தை உயர்வாகப் போற்றும் இஸ்லாம், தியாகத்தைப் போதிக்கும் கிறிஸ்தவ சமயத்தையும் சேர்ந்த சமயப் பாடசாலை மாணவர்கள் பொருத்தமானவர்கள் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X