Editorial / 2020 மே 07 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட வேளையில் சட்டவிரோதமான முறையில், வடி சாராயம், கள் விற்பனைக்காக வைத்திருந்த 04 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, கல்முனை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி பொ. செல்வகுமார் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் என். சுசாதரனின் பணிப்புரைக்கமைய, மதுவரி திணைக்களத்தின் உத்தியோகத்தர்களால் நேற்று முன்தினம் (06) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, இந்த நான்கு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திருக்கோவில், காஞ்சிரங்குடா, ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள வாச்சிக்குடா, கண்ணகிபுரம் ஆகிய பகுதிகளில் வடி சாராயம், கசிப்பு போனற்வற்றை சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதாகினர் என கல்முனை மதுவரி நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
11 minute ago
18 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
47 minute ago
56 minute ago