2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மத்தியச் சந்தைப்பகுதியை அழகுபடுத்தும் நிகழ்வு

Gavitha   / 2016 ஜனவரி 07 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று மாநகர சபையின் மத்திய சந்தைப் பகுதியை அழகுபடுத்தும் நிகழ்வு, செலான் வங்கியின் அனுசரணையில் செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பிக்கப்பட்டது.

நகரை அழகுபடுத்தும் திட்டத்தை முன்னிட்டு, செலான் வங்கியின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக அக்கரைப்பற்று மத்திய சந்தையின் வீதிகளின் நடுப்பகுதியில் புற்கள் மற்றும் மரங்கள் நடப்படும் நிகழ்வு நடைபெற்றது.

அக்கரைப்பற்று செலான் வங்கியின் உதவி முகாமையாளர் டபிள்யூ.லக்ஸ்மன் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில், மாநகர சபையின் ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி கிழக்கு மாகாண செலான் வங்கியின் பிராந்திய முகாமையாளர் எஸ்.எஸ்.முரதீஸ் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு, திட்டதை  ஆரம்பித்து வைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X