Princiya Dixci / 2016 ஜனவரி 18 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கல்முனை பொலிஸ் பிரிவிலுள்ள துறைநீலாவணையில் அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகளவில் சட்ட விரோதமாக மதுபானம் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குடும்பஸ்தர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (17) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார் என கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
துறைநீலாவணை 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணிக்கம் திருச்செல்வம் (வயது 48) என்பவரே 12 மதுபானப் போத்தல்களை சைக்கிளில் எடுத்துச் சென்றவேளை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட புலனாய்வு தலைமைப் பொறுப்பதிகாரி அப்துல் அமீரின் உத்தரவுக்கமைவாக உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஐ. சரத்சந்திர தலைமையிலான பொலிஸ் அணியினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
10 minute ago
22 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
29 minute ago