2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மரக்குற்றிகளை வைத்திருந்தவருக்கு அபராதம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே .றஹ்மத்துல்லா

திருக்கோவில்  விநாயகபுரம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மரக்குற்றிகளை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதிமன்றினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் நேற்று (15) விதிக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளை அரசுடமையாக்குமாறும் உத்தரவிட்டப்பட்டது.

குறித்த நபரை புதன்கிழமை(14) கைது செய்த வனவளப் பாதுகாப்பு அதிகாரிகள்அவரிடமிருந்து 7 முதிரை மரக்குற்றிகள் மற்றும் 2 அரிந்த வேம்பு மரக்குற்றிகளையும் அரிவதற்குப் பயன்படுத்திய வாள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.

இதேவேளை, அதே இடத்தில் 7 அரிந்த முதிரை மரக் குற்றிகளை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளை அரசுடமையாக்குமாறும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X