பி.எம்.எம்.ஏ.காதர் / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
“குறைந்த வளங்களோடு இயங்குகின்ற மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தை, இன்றிலிருந்து நான் தத்தெடுத்து இப்பாடசாலைக்குத் தேவையான பௌதிக வளங்களைக் கட்டியெழுப்புவதற்கு என்னால் முடிந்த பங்களிப்பைச் சேய்வேன்” என, அம்பாறை மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன் தெரிவித்தார்.
மருதமுனை அல்-மதீனா வித்தியத்தில், இரண்டாம் தவணை கணிப்பீட்டுப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 89 மாணவர்களுக்கான மாணவர் பரிசளிப்பு நிகழ்வு, திங்கட்கிழமை(25)அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லா தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் டொக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர்மௌலானா, அதிதிகளாக ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எல்.எம்.தாஹீர், வர்த்தகர் எம்.எச்.எம்.றிஸ்வி, கவிஞர் நதீர் பாறூக், எம்.ஐ.எம்.இஸ்ஹாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி சுனாமிக்கு முன்னர் இந்த இடத்தில்தான் இருந்தது அப்போ இங்கு தான் நான் கல்வி கற்றேன்.
“மாணவர்களே, உங்களிடம் மூன்று விடயங்கள் இருந்தால் என்னைப் போன்று நீங்களும் வாழ்க்கையில் உயர்ந்து குறைந்த வளங்களோடு மிகவும் கஷ்டத்துடன் உங்களுக்காக உழைக்கின்ற ஆசிரியர்களைக் கௌரவிக்க முடியும். அந்த மூன்று விடயங்கள் என்வென்றால், ஒன்று தினமும் தொழுகை, இரண்டாவது இறைவனிடம் பிரார்த்தனை, மூன்றாவது விடாமுயற்ச்சி. இவற்றுடன் என்னால் முடியும் என்ற நம்பிக்கை. இவற்றை நீங்கள் தவறாமல் கடைப்பிடித்தால் வாழ்வில் உயர்ந்த அந்தஸ்த்தைப் பெற்று பெற்றுக் கொள்வீர்கள்” என்றார்.
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Jan 2026
25 Jan 2026