Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 டிசெம்பர் 31 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுவில், அஷ்ரப் நகரிலுள்ள மீள்குடியேற்றக் கிராமத்தில் மருந்தகமொன்றை அமைக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஒலுவிலில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அஷ்ரப் நகர் பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அங்கு பாடசாலை, மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியவசிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அஷ்ரப் நகரை அண்டிய ஹிறா நகர் மற்றும் ஆலிம்சேனை போன்ற பிரதேசங்களில் சுமார் 600க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வாழும் மக்களுக்கு திடீரென நோய் ஏற்பட்டால் சுமார் 7 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, வயோதிபர்கள், சிறுவர்கள், பெண்கள் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களின் நலன்கருதி, மத்திய மருந்தகமொன்றை அமைப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago