Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூலை 21 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குபட்ட வொலிவேரியன் கிராம பிரிவு 09 இல் மருமகனின் தாக்குதலினால் , மாமனார் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் 62 வயதுடய மீராசாயிப் சின்னராசா என்பவரே உயிரிழந்துள்ளார் .
திருமணமான தனது மகளை விவாகரத்து செய்ய தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே இவ்வாறு கொலையில் முடிவடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான 32 வயதுடைய சந்தேக நபர் றிஸ்வி முகமட் அன்சார் தலைமறைவாகியுள்ளதுடன் அடிக்கடி இவ்விடயத்தினால் தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த குறித்த சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இச் சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகி மரணடைந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடான் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
8 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago