Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை மாநகர சபையின் சேவைகள் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்காக அழைப்பு நிலையம் (Call Centre) எனும் விசேட கருமபீடம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் பழைய கட்டடத் தொகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்நிலையத்தில், பொது மக்கள் தமது முறைப்பாடுகளை அலுவலக நேரத்தில் 0672030000 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது நேரடியாக வருகைதந்து, வாய்மூலமாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தெரிவிக்க முடியும் என மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், நேற்று (04) தெரிவித்தார்.
திண்மக்கழிவகற்றல் சேவை, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் வடிகான் பராமரிப்பு உட்பட மாநகர சபையால் முன்னெடுக்கப்படுகின்ற எந்தவொரு சேவை தொடர்பிலும் பொதுமக்கள் இவ்வாறு முறைப்பாடளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று, எரிபொருள் தட்டுப்பாடு உட்பட நாட்டின் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சிரமமின்றி இலகுவாகவும் விரைவாகவும் தமது முறைப்பாடுகளை முன்வைத்து, உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கரும பீடத்தை, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குமாறும் மேயர் கேட்டுக்கொண்டார்.
28 minute ago
47 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
47 minute ago
56 minute ago
1 hours ago