ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 மே 22 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமங்களில், மலசலக் கூட வசதியை அமைத்துக் கொடுக்கும் முகமாக, தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் மற்றும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகள், இன்று (22) வழங்கப்பட்டன.
வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும், மலசலக் கூட வசதியற்ற 14 குடும்பங்களுக்கு, தலா 70 ஆயிரம் ரூபாய் வீதம், மூன்று கட்டங்களாக காசோலைகள் வழங்கப்படவுள்ளன. இந்நிலையில், முதலாம் கட்டமாக, ஒரு குடும்பத்துக்கு தலா 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் கையளிக்கப்பட்டன.
இத்திட்டத்திட்டத்துக்கு அமைய, மீள்குடியேற்ற கிராமங்களான திராய்க்கேணி, அஸ்ரப் நகர், ஆலம்குளம், ஹூசைனியா நகர், ஹிறா நகர், உதுமாபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் காசோலைகளைப் பெற்றுக் கொண்டனர்.
14 minute ago
27 minute ago
29 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
29 minute ago
32 minute ago