Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
மழை காலங்களில் அக்கரைப்பற்று பொது மையவாடியில் தேங்குகின்ற மழை நீரை கட்டுப்படுத்தும் நோக்கில், விசேட வேலைத்திட்டமொன்றை, அக்கரைப்பற்று மாநகர சபை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் அதாஉல்லா அஹமட் சக்கி தலைமையில் நடைபெற்றது.
இவ்வேலைத்திட்டம், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று ஜம்இயதுல் உலமா சபை அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்துடன் இணைந்து பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளவுள்ளது.
மழை காலங்களில் இம்மையவாடியில் ஒன்று சேர்கின்ற மழை நீர் தேங்கி நின்று வடிந்து செல்ல முடியாமல் உள்ளதோடு, வெள்ள நீர் உட்புகுவதன் மூலமாகவும் இம்மையவாடியில் மழை காலங்களில் குழிகள் வெட்ட முடியாத நிலை ஏற்படுகின்றது.
இதற்கமைவாக, அக்கரைப்பற்று மாநகர சபையால் இம்மையவாடி சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் நிதி மூலம் புனரமைக்கப்படுவதற்கான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியில் 1.5 மில்லியன் ரூபாய் பணத் தொகையை அக்கரைப்பற்று மாநகர சபை மூலம் வழங்கி வைக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .