2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்.பெண் ஊடகவியலாளரை பகிரங்கமாக அச்சுறுத்திய நபர்

Editorial   / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க    வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி   யாழ். முத்திரைச் சந்தியில்  அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக  சிவசேனை அமைப்பினரால் திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற யாழ். பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசாவை, தனி நபர் ஒருவர் பகிரங்கமாக அச்சுறுத்தினார்.

​அந்த நபர், மீடியா, என்றால் மீடியா மாதிரி கத, மரியாதையா கதை

தேவையில்லாத வேலை பார்க்காத, உங்க மாதிரி ஆட்களால்தான் நாடே நாசமாகிறது.  

உங்கள மாதிரி ஆட்களால்தான் நாடே நாசமா போது, நீங்கள் எல்லாம் மீடியா இல்ல ஊர கெடுக்கும் ஆக்கள், என்று அந்த பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்தி விட்டு சென்றுவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .