2025 மே 01, வியாழக்கிழமை

மாடுகளைத் திருடிய கும்பல் சிக்கியது

Editorial   / 2018 ஜனவரி 24 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு,  கனகராசா சரவணன்

அம்பாறை, திருக்கோவில், வீடுகளில் இரவு நேரங்களில் மாடுகளைக் களவாடி விற்பனை செய்து வந்த ஐவர் அடிங்கிய கும்பலொன்றை, திருக்கோவில் பொலிஸார், நேற்று (23) கைதுசெய்தனர். 2 மாடுகளுடன் இதன்போது மீட்கப்பட்டன.

திருக்கோவில் 2ஆம் பிரிவு  ஆழ்வாப்பிள்ளையார் வீதியிலுள்ள ஒருவரின் 2 மாடுகள், அவரது மாட்டுப்பட்டில் இருந்து கடந்த 14ஆம் திகதி திருட்டுப் போயுள்ளது. இதனையடுத்து, குறித்த மாடுகளைத் தேடிவந்த நிலையில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருப்பதை கண்டறிந்து, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து, சம்பவதினமான நேற்று மாலை  பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு அக்கரைப்பற்று டீன் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய மற்றும்  ஹிஜிரா வீதியைச் சோர்ந்த 42 வயதுடைய இருவரைக் கைது செய்ததுடன், மாடுகளை மீட்டனர்.

தொடர்ந்து திருக்கோவில் பாலைக்குடா, திருக்கோவில் 3 பிரிவு , திருக்கோவில் முதலாம் பிரிவைச் சோர்ந்த 33, 24, 28 வயதுடையவர்கள்  கைது செய்தனார்.  இவர்கள் இந்த மாடுகளை குறித்த தினத்தில் பட்டியில் இருந்து  திருடிச் சென்று, தமது மாடுகள் என அவற்றை அக்கரைப்பற்றில் விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான   விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .