அஸ்லம் எஸ்.மௌலானா / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில், மாட்டிறைச்சி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களுக்கான நிர்ணய விலை தொடர்பாக, கல்முனை மாநகர சபை மண்டபத்தில் இன்று (15), மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே, இவ்விடயம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் தனி மாட்டிறைச்சி 900 ரூபாய்க்கும் முள்ளுடன் 800 ரூபாக்கும், ஈரல் - 1,000 ரூபாய், குடல் - 500 ரூபாய், மனிக்குடல் - 300 ரூபாய், ஒரு மூளை 250 - ரூபாய் எனும் அடிப்படையில், கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
குறித்த விலைகளை விட அதிக விலைகளுக்கு விற்பனை செய்யும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
நாளை வியாழக்கிழமை (16) ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளையில், இறைச்சிக் கடைகளில் இவ்விலைப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
10 minute ago
16 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
48 minute ago