Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, ஒலுவில் ஆயுர்வேத மத்திய மருந்தகத்தை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒலுவில் மத்திய மருந்தகம் குடிநீர் மற்றும் மலசலகூட வசதி தளபாட வசதி மற்றும் இடவசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருகின்றதென தெரிவித்த பொது மக்கள், இதனால் வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்களும் பல அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இம் மருந்தகத்தில் ஒலுவில், சின்னப்பாலமுனை, திராய்க்கேணி மற்றும் அஷ்ரப் நகர் போன்ற கிராமங்களிலிருந்து நாளாந்தம் அதிகமான நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும் தெரிவிக்கின்றனர்
இம் மருந்தகத்தை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்தி நோயாளர் விடுதியையும் ஏற்படுத்தித் தருமாறும் மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
இதற்கென சகல வசதிகளுடன் புதிய கட்டடத் தொகுதி நிர்மாணிப்பதோடு, வைத்தியர் விடுதியையும் ஏற்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago