2025 மே 15, வியாழக்கிழமை

மீண்டும் இடமாறும் நகர அபிவிருத்தி அதிகார சபை

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த கல்முனையில் இயங்கி வந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் காரியாலயம், மீண்டும் கல்முனையில் இயங்குமென, பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா, இன்று (07) தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபை வளாகத்தில் இயங்கி வந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் காரியாலயத்தை, திடீரென அம்பாறைக்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

இது தொடர்பாக, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டு சென்றதையடுத்து, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு பிரதமர் விடுத்த பணிப்புரைக்கமைய,  இவ் அலுவலகம் மீண்டும் கல்முனையில் இயங்குவதற்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் காரியாலயம் சகல வளங்களுடனும் இயங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .