2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மீண்டும் பயிற்சிநெறி ஆரம்பிக்கப்படுமா?

Editorial   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

அம்பாறை, காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் இடைநிறுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சிநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படுமா என பெற்றோர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

சமகாலத்தில் பெரிதும் வேண்டப்படுகின்ற இப்பயிற்சிநெறி, காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 1997 இல் ஆரம்பிக்கப்பட்டு, பல வருடகாலமாக சிறந்தமுறையில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், இப் பயிற்சிநெறியின் போதனாசிரியர் 2020 இல் மரணித்ததன் காரணமாக பயிற்சிநெறி இடைநிறுத்தப்பட்டது.

அப்போதனாசிரியருக்கு பதிலாக வேறு போதனாசிரியர்கள் இன்று வரைக்கும் நியமிக்கப்படவும் இல்லை, பயிற்சிநெறிகள் இடம்பெறவும் இல்லை.

இப்யிற்சிநெறியை மிண்டும் ஆரம்பிக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தற்போது இப்பிரதேச இளைஞர், யுவதிகள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சிநெறி பெறுவதாயின் அக்கரைப்பற்று தொழிற்பயிற்சி நிலையத்துக்கோ அல்லது சம்மாந்துறை தொழிற்பயிற்சி நிலையத்துக்குகோ செல்லவேண்டியுள்ளது.

எனவே, இவ்வாண்டு அரையாண்டுக்காவது காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர் பயிற்சிநெறி ஆரம்பிக்குமாறு, பிரதேச இளைஞர், யுவதிகளின் பெற்றோர் காரைதீவில் பொதுநல அமைப்புகளிடம் வேண்டுகோள் விடுப்பதுடன், இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X