2025 மே 05, திங்கட்கிழமை

மீன் வாங்க சென்றோர் கைது

Princiya Dixci   / 2021 மே 28 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் களப்பு ஆற்றில் பயணக் கட்டுப்பாட்டை மீறி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது, நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டவர்களும், மீன் வாங்குவதற்குச் சென்ற பொதுமக்களும் நேற்று (27) கைதுசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலக மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் எம்.எஸ்.எம். அப்துல் மலீக் தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாது, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது கூட்டமாக இருந்த வேளையில் 14 பேர்க்கு எதிராக இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணனின் ஆலோசனைக்கமைய, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.யூ. அப்துல் சமட் தலைமையில் நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்ட போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X