Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Yuganthini / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
இறக்காமம் பிரதேச செயலகத்துக்குட்டபட்ட வரிப்பத்தான்சேனை மலையடிக்குள் முதலியார் அணைக்கட்டு அமைப்பதற்காக, நீர்ப்பாசன மற்றும் நீர் வளமூல முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, 60 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்துள்ளாரெனவும் அதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ,இன்று (13) அவர் விவரிக்கையில்,
“மலையடிக்குளத்தின் முதலியார் அணைக்கட்டு, பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. இதனால் இப்பிரதேசத்திலுள்ள 550 ஏக்கர் நெற்செய்கைக்காணிகளில் செய்கை பண்ணுவதில் விவசாயிகள் பல காலமாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர்.
“விவசாயிகள், இதுவரை காலமும் அணைக்கட்டை மண்மூடைகள், மரக்குற்றிகளால் இடைமறித்து, தமது விவசாய நிலங்களுக்கு இரு போகமும் நீர் பாய்ச்சி வேளாண்மை சாகுபடி செய்து வந்தார்கள்.
“விவசாயிகள் எதிர்கொண்டு வந்துள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு முதலியார் விவசாய அமைப்பினர் இடைவிடாது மேற்கொண்டதன் பலனாக, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் கே.டி.சறிவர்த்தன், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், இவ்வேலைத்திட்டத்திற்கான உதவிகள் கிடைத்துள்ளன” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
53 minute ago