Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ். மெளலானா
அரசாங்க ஊழியர்களுக்கான புதுவருட விசேட முற்பண தொகையை, தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு 10,000 ரூபாயாக அதிகரிக்குமாறு, இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கோரிக்கையை வலியுறுத்தி, நிதியமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு என்பவற்றின் செயலாளர்களுக்கு மேற்படி சங்கம் அவசர மகஜர்களை அனுப்பி வைத்திருப்பதாக, அதன் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார், இன்று (27) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “அரச ஊழியர்களுக்கு புது வருட விசேட முற்பணம் வழங்கப்படுவதன் பிரதான நோக்கம், புது வருடத்தில் அரச ஊழியர்களது பிள்ளைகளுக்குரிய பாடசாலை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகும்.
“ஆனால், அரசாங்கம் அறிவித்துள்ள 4,000 ரூபாயைக் கொண்டு, தற்போதைய பொருளாதார நெருக்கடியில் எதனையும் செய்து கொள்ள முடியாது. இத்தொகையைக் கொண்டு ஒரு பிள்ளையின் தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத இக்கட்டான சூழ்நிலையில் அரச ஊழியர்கள் உள்ளனர் .
“எனவே, இத்தொகையை 10,000 ரூபாய் வரை அதிகரிப்பதன் மூலமே தமது பிள்ளைகளின் தேவைகளை அரச சேவை ஊழியர்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
39 minute ago
54 minute ago
2 hours ago