Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
பி.எம்.எம்.ஏ.காதர் / 2018 மார்ச் 07 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் பள்ளிவாசல் உடைப்பு என்பவற்றை நிறுத்தி, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோருக்கு, மருதமுனை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் எம்.ஐ.ஹூஸைனுத்தீன் றியாழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்த வேண்டுகோளில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“கடந்த வாரம் அம்பாறையிலும் நேற்று முன்தினம் கண்டி-திகன மற்றும் மடவளை போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு, வர்த்தக நிலையங்கள் தீயிட்டு கொழுத்தப்பட்டதுடன், பலர் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“இந்த நாட்டில் காலத்துக்குக் காலம் ஆட்சிக்கு வருகின்ற ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம் சமூகம் ஆதரவு வழங்கி உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிலையில், இவ்வாறான விரும்பத்தகாத செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்சத்தையும் துன்பத்தையும் ஏற்படுத்துகின்றது.
“இன்றைய நல்லாட்சியில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது நல்லாட்சிக்கு களங்கத்தையும், குந்தகத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
“இந்த நிலை தொடருமானால், இனங்களுக்கிடையில் முரண்பாடுகளும் பிரிவினைகளும் அதிகரித்துச் சென்றுவிடும். இதனால் எதிர்கால சமூகம் பிரிவினையுடன் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
“ஆகவே, இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகண்டு, நாட்டில் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என அந்த வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
26 minute ago
36 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
26 minute ago
36 minute ago
40 minute ago