Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா
முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காக குரல் கொடுக்கும் அனைவரும் சஹ்ரான் வாதிகளாக குறிவைக்கப்பட்டும், அவர்களை அடையாளப்படுத்துகின்ற ஒரு அபாயகரமான சூழ்நிலையை முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கியுள்ளதாக தெரிவித்த சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் , மதக் கலாசார விடயங்கள், பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, காணி உரிமைகள், நிருவாக அதிகார எல்லைகள் தொடர்பில் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
'எதிர்காலம்' எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலொன்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம்களின் உரிமைகள், பாதுகாப்பு தொடர்பில் பேசுகின்ற அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், முஸ்லிம் மதத்தலைவர்கள், நிருவாகிகள் குறிவைக்கப்பட்டு சஹ்ரான்வாதிகளாக சித்தரித்து முடக்குகின்ற விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமென தெரிவித்த சட்டத்தரணி பஹீஜ், இன்று எல்லா வகையிலும் முஸ்லிம்கள் எதிரியாக சித்தரிக்கப்படுகின்ற ஒரு அபாகரமான சூழ்நிலையை முஸ்லிம் சமூகம் தற்பொழுது நாட்டில் எதிர்கொண்டுள்ளது என்றார்.
தமிழ் சமூகத்தின் உரிமைப்போராட்டத்திற்காக தமிழ் இயக்கங்கள் ஆயுதமேந்தி போராடிய போது, தமிழ் சமூகம் பொது எதிரிகளாகப் பார்க்கப்பட்டு பல்வேறுபட்ட சொல்லொன்னா துயரங்களை அனுபவித்து வந்தார்கள். இன்று அந்த நிலை மாறி முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து பொது எதிரிகளாகப் பார்க்கப்படும் அபாயம் தோற்றம்பெற்று வருகின்றதெனவும் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago