Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
“ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு என்று கொள்கைகள் இருக்கின்றன. எங்களின் எம்.பிக்களுக்கு சமூகப் பொறுப்புக்கள் இருக்கிறன. அதை கொண்டு அவர்கள் முடிவு செய்துள்ளார்கள். அதை கேள்விக்குட்படுத்தும் எவ்வித அருகதையும் சகோதரர் சுமந்திரனுக்கு இல்லை” என ஸ்ரீ.ல.மு.கா உச்சப்பீட உறுப்பினர் யு.கே ஜபீர் தெரிவித்தார்.
எம்.ஏ சுமந்திரன் எம்.பி, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, 20ஆம் திருத்த சட்டத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்களுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க படவில்லை. அதனால் எங்களுக்கு நம்பகத்தன்மை இல்லை என்ற வாதத்தை முன்வைத்துள்ளார்.
அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, ஜபீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்க வலியுறுத்தும் சுமந்திரன் எந்தத் தகுதியும் இல்லாதவர். மு.கா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியுலம்மல்ல. சுமந்திரன், முஸ்லிம் காங்கிரஸின் ஆலோசகருமில்லை. எங்களின் விடயங்களில் தலை போட அவர் அருகதையற்றவராகவே நாங்கள் பார்க்கிறோம்” என்றார்.
“சமூக ஒற்றுமை தொடர்பில் எதுவும் தெரியாத அவர், சமூகங்கள் தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது. எதிரணி தலைவரை போன்று கருத்து வெளியிட்டால் அவர் எதிரணி தலைவராகி விட முடியாது. எங்களின் சமூகத்தின் தேவையென்ன அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்த ராஜதந்திரிகளை தான் முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவுக்கு சுமந்திரன் அவ்வளவு சுத்தமானவராக நாங்கள் பார்க்கவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago