Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
கடந்த டிசெம்பர் 24ஆம் திகதி ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற 2 படகுகள் காணாமல் போன நிலையில், அவற்றில் ஒரு படகுடன் மீட்கப்பட்ட 2 மீனவர்களையும் நாளை புதன்கிழமை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறைப் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
மாலைதீவில் தங்க வைக்கப்பட்டுள்ள கல்முனையைச் சேர்ந்த இம்மீனவர்களை விமானம் மூலம் அழைத்து வருவதில் சட்டச்சிக்கல் இருப்பதாலும் அவர்களின் படகை மாலைதீவிலிருந்து கொண்டுவர வேண்டியுள்ளதாலும்; இவர்களை கடல் மார்க்கமாக அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாலைதீவுக் கடற்றொழில் திணைக்களம் மற்றும் கடற்படையினரின் உதவியைப் பெறுவதற்காக அந்நாட்டின் உப ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சரை திங்கட்கிழமை (09 தான் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, காணாமல் போன ஏனைய 4 மீனவர்களையும் மாலைதீவுக் கடற்பரப்பில் அந்நாட்டுக் கடற்படையினர் தேடியபோதும், அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
கடந்த 05ஆம் திகதி மாலைதீவுக் கடற்படையினரால் 2 மீனவர்களும் மீட்கப்பட்டு, மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மாலைதீவுக்குச் சென்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
2 hours ago
2 hours ago