2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

Gavitha   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தின் 2016ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை (11) அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த கூட்டம், ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே, முஸ்லிம் காங்கிரஸின்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் உள்ளிட்டோரின் தலைமையில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட செயலகத்தின் செயலாளர் துஷித பி வணிக சிங்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நிறுவனங்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, கடந்த வருட அபிவிருத்தித் திட்டங்கள், 2016ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடுகள், வேலைத்திட்டங்கள் தொடர்பிலான ஆலோசனைகள், திட்ட வரைபுகள் போன்றவை தொடர்பாக கருத்துக்கள் பறிமாறப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X