Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 மே 04 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
முன்னாள் போராளிகளைக் கைதுசெய்யும் நடவடிக்கையைக் கண்டித்து அம்பாறை நகரில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக நாளை வியாழக்கிழமை காலை ஒன்பது மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று காணாமல் போனவர்களினுடைய குடும்பங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.
அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கண்டனம் தெரிவிக்கப்படவுள்ளதுடன், அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில்; அவ்வாறான கைதுகள் இடம்பெறாதிருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறிருக்க, இந்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றொரு ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
13 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago