2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தம் வழங்கப்படும் மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு கிழக்கு மாகாண விழிப்புணர்வு அற்றோர் சங்கத்தின் தலைவர் எம்.பி.அப்துல் றகுமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கோரிக்கை விடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று திங்கட்கிழமை தமது சங்கம் மகஜர் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.  

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவான மூவாயிரம் ரூபாயை சமூக சேவை திணைக்களத்தினுடைய அங்கவீனர்களுக்கான தேசிய செயலகம் வழங்குகின்றது. இக்கொடுப்பனவு குறைவாக உள்ளதால், எவ்வித தொழிலையும்; செய்ய முடியாத மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் ஜீவனோபாயத்துக்காக மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

தற்போது வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால்,  5 பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மூவாயிரம்  ரூபாய் கொடுப்பனவு போதாமையாக உள்ளது.  இதன் காரணமாக மாற்றுத்திறனாளிகள் வறுமை நிலைமைக்கு ஆளாகுவதுடன், அவர்களினுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையும் பாதிக்கப்படுகின்றது.

எனவே, எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு ஆவன செய்யுமாறு கோருகின்றோம்' எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X