2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பது நியாயமற்றது

Gavitha   / 2016 ஜனவரி 04 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

'நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை, மாறாக தமிழ் மக்களுக்கு நிறைய கிடைக்கின்றன' என்று முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கூறியிருப்பது நன்றி மறந்த செயல் மட்டுமல்ல, யதார்த்தத்துக்கு மாற்றமானதொரு கருத்தாகும் என்று உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

'நல்லாட்சி அரசாங்கத்திடம் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்பார்த்த அனைத்தும் கிடைத்துள்ளது. இரண்டு தேசியல் பட்டியல் உறுப்பினர்கள், அமைச்சு பதவிகள் என மு.கா.வுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறிருக்கையில் நல்லாட்சியை குறைகூறுவது எந்த விதத்திலும் நியாயமற்றதாகும்.

அதேநேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த அமைச்சுப் பதவிகளை கேட்கவில்லை. மாறாக தமது சமூகத்துக்கு என்ன தேவை இருக்கின்றனவோ, அவற்றை முன்வைத்து தற்போது அவையனைத்தையும் நிறைவேற்றியும் வருகின்றது.

அக்கட்சியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்,  மக்களின் குறையே எமது குறை என்று கூறி, மக்களது குறைகளை சரிவர தீர்த்து வைக்கின்றனர்.

இந்த நிலையில், நல்லாட்சியில் முஸ்லிம்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என மு.கா.வின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் கூறிவருவது தமது கையாலாகாத தனத்தை மறைக்க சொல்லும் ஏமாற்று வார்த்தையாகும்.

ஆகவே, நல்லாட்சியில் அங்கம் வகித்துக்கொண்டு கிழக்கு மாகாண சபையின் ஆட்சியையும் வைத்துக்கொண்டு, ஒன்றும் இல்லை என இவர்கள் கூறுவது நன்றி சரியானதல்ல. இது முஸ்லிம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் செயலாகும்' என்று அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X